18 ஜூலை, 2018

தனது வயிற்றில் தர்பூசணியை வைத்து வாளால் வெட்டும் காட்சி

Kadhal Thayakam Tamil Short Flim

சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலைபிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'வம்சம்' உள்பட பல சீரியல்களில்
நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா. 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
செய்துக் கொண்டார்.இது சின்னத்திரை நடிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதனையடுத்து நடிகை பிரியங்காவின் உடலை கைப்பற்றி
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

17 ஜூலை, 2018

பாலியல் துன்புறுத்தலின் ஆபத்தான அறிகுறிகள்


தற்போது குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லை அதிகரித்து விட்டது. 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நடவடிக்கையை  கவனித்து எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

பாலியல்  சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகள் சரியாக தூங்க மாட்டார்கள்

சுட்டித்தனமான குழந்தைகள் சாந்தமாகி விடுவார்கள்

சாந்தமான குழந்தைகள்  பிடிப்பார்கள்

பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவரிடம் குழந்தைகள் பழகுவதை தவிர்ப்பார்கள். மேலும்  அவர்களை பார்த்தாலே அச்சப்படுவார்கள்.

அடிக்கடி வயிறு வலிப்பதாக கூறுவது, உடலில் ஏற்படும் திடீர் காயங்கள் இவை அனைத்தும் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் அவர்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியுள்ளனர் என்று அர்த்தம்.

15 ஜூலை, 2018

மாதவிலக்கு பிரச்சனைக்கு இயற்கை மருந்து

பெரிய நெல்லிக்காயைத் துருவி காபி  பொடி போல் செய்து நாள்தோறும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.

அதேபோல் நூறு கிராம் அச்சு வெல்லத்துடன் பத்து  கிராம் எள் சேர்த்து தூள் செய்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு வலி இருக்காது.

கீழாநெல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் ஒரே ஒரு மிளகு சேர்த்து அரைத்து மாத விலக்கு ஏற்படும் முதல் மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

செம்பருத்திப் பூ  மாத விலக்கை ஏற்படுத்தக்கூடியது. தகுந்த வயது வந்தும் பூப்பெய்யாத பெண்கள் செம்பருத்திப் பூவை உண்டு வந்தால் பூப்பெய்யலாம்.

வெள்ளைப்பூண்டை தோல்நீக்கி வேகவைத்து சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம் பூ தலா 200 கிராம் எடுத்துப் பொடிக்கவும். 5 கிராம் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட்டு கஷாயமாக்கிப் பருகி வந்தால் ஒழுங்கற்ற மாதவிலக்கு சரியாகும்.