ட்விட்டரை பற்றிய சில வியக்கவைக்கும் உண்மைகள்

0
298

ட்விட்டர் (Twitter), facebook க்கு அடுத்தப்படியாக அனைவரும் பயன்ப்படுத்தும் ஒரு சமூக தளமாகும். ஆனால் ட்விட்டரை பற்றி சில வியக்கவைக்கும் தகவல்கள் உள்ளன, அதனை இப்போது பார்ப்போம்.

 
 1. ஒரு நிமிடத்திற்கு 350,000 குறுச்செய்திகள் (Tweets) வெளியிடப்படுகிறது
 2. ட்விட்டர் 310 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது, கிட்டத்தட்ட அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை கொண்டுள்ளது.
 3. ட்விட்டரின் முந்தைய பெயர் “Friendstalker”
 4. FBI யிடம் ட்விட்டரின் slang என்ற வழக்கு மொழியின் அகராதி உள்ளது. (சிலர் சுருக்கமாக LOL (“laughing out loud”) என்று கூறுவார்கள், இதனையே slang மொழி என்பர், இதேபோல் 20 க்கு மேல் வார்த்தைகளை FBI அதன் அகராதியில் வைத்து இருக்கிறது. )
 5. @Sweden என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை நடத்த வாரம் ஒரு முறை என ஒவ்வொரு குடிமகனிடம் ஒப்படைக்கப்படுகிறது. (இதுவரை 175கும் மேற்பட்டோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.)
 6. ஒரு போலி ட்விட்டால் பங்குசந்தையில் $130 billion நஷ்டத்தை சந்தித்தது.
 7. ஒரு நாளில் ட்விட்டரில் வெளியிடப்படும் செய்திகளை புத்தகமாக தயாரித்தால் அது 10 மில்லியன் பக்கத்திற்கு வரும்.
 8. அமெரிக்கர்கள் வெளியிடும் குறுச்செய்திகளை அமெரிக்கக் காங்கிரசு நூலகம் காப்பகப்படுத்துகிறது.
 9. ஒரு நாளைக்கு 5 மில்லியன் குறுச்செய்திகளை CIA படிக்கிறது.
 10. ட்விட்டரில் அதிகம் ரசிகர்கள் Justin Bieberகே உள்ளனர். (8 கோடிக்கும் மேல்) அதில் 50% போலி பயனர் கணக்குகள்.
 11. அமெரிக்கா கியூபர்களுக்காக ட்விட்டரை போல் வேறு ஒரு தளத்தை 2011ல் உருவாக்கியது.
 12. 2009லிருந்து ட்விட்டருக்கு சீனா தடை விதித்துள்ளது.
 13.  44% பயனர் எந்தவித டுவிட்டும் இதுவரை வெளியிடவில்லை.
 14. மைக்கல் ஜாக்சன் இறப்பிற்கு பின் ஒரு நிமிடத்தில் அவரை பற்றி 5000 டிவீட்ஸ் வெளியானது.
 15. ட்விட்டர் பறவையின் பெயர் லாரி (Larry).
 16. 2011ல் அமைதியை (War and Peace) பற்றி 8163 டிவீட்ஸ் வெளியிடப்பட்டது.
 17. வத்திக்கான் (Vatican) : போப்பை ட்விட்டரில் பின்தொடர்வதன் மூலம் பாவமன்னிப்பு கேட்கும் நேரத்தை குறைக்கலாம்.
 18. 2013ல் Associated Press ன் ட்விட்டர் கணக்கை யாரோ ஊடுருவி, அமெரிக்க வெள்ளைமாளிகையில் வெடி பொருள் உள்ளதாகவும், பங்குச்சந்தை நொறுங்கிவிடும் எனவும் செய்தி வெளியானது.
 19. இவ்வுலகில் 90% இணைய பயனர்கள் ட்விட்டரை பயன்ப்படுத்துவது இல்லை.
 20. 2012ல், வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் (Hugo Chávez) தனது ட்விட்டரின் 3,000,000வது ஆளாக பின்தொடர்ந்த 19வயது பெண்ணிற்கு ஒரு வீடு பரிசாக அளித்தார்.
 21. உலக முக்கிய தலைவர்களில் ஒபாமாவிற்கே அதிகம் பின்தொடர்பவர்கள் இருக்கின்றனர். (2016)
 22. சவூதி அரேபியா (2016) ட்விட்டர் மூலம் நாத்திகம் பேசியவர்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 2000 கசையடியும் கொடுக்கப்பட்டது.
 23. சிகரெட் மற்றும் மதுவைபோல் ட்விட்டர் அடிமைகளும் உண்டு

Source : http://www.factslides.com/s-Twitter

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here