கருசிதைவு ஏற்படுவது எதனால்? கருச்சிதைவில் வகைகள் என்னென்ன?

0
15
கற்பத்திலுள்ள கருவானது உயிர் பெறுவதற்கு முன்பே கலைவதையே கருச்சிதைவு என்கிறோம். கருவிற்கு உயிர் 28 வாரத்திலோ அல்லது ஒரு கிலோ எடை அடைந்த பின்னர் உருவாகிறது.
கருச்சிதைவிற்கு தாயின் கடுமையான தொற்று நோய் காய்ச்சல், மிகை இரத்த அழுத்த நோய், சிறுநீரக அழற்சி, பால்வினை நோய், சர்க்கரை நோய், கடுமையான உடல் உழைப்பு, தீவிரமான உடற்பயிற்சி மேலும் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் அதிகமான உடலுறவு அல்லது பலமான அடி படுதல் போன்ற காரணங்களால் சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
கர்ப்பபையில் பிறவி குறைகள், கட்டிகள், சூலகக் கட்டிகள், அழற்சி, கணவன் மனைவி இரத்தவகை ஒத்துக் கொள்ளாமை போன்றவைகளாலும் சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
கருச்சிதைவின் அறிகுறிகள் 
அடிவயிற்றில் வலியும், உதிரப் போக்கும் கருச்சிதைவின் முக்கியமான அறிகுறியாகும். அடிவயிற்று வலி கர்ப்பப்பை சுருங்குவதால் ஏற்படும். உதிரப்போக்கு  கரு முட்டை பிரிவதால் ஏற்படும். 
மாதத்தீட்டு  நின்று போன சில காலத்திற்கு பின் அடிவயிற்றில் கடுமையான வலியும் உதிரப்போக்கும் இருந்தால் கருச்சிதைவை சந்தேகத்தில் கொள்ள வேண்டும்.
  
சில சமயங்களில் மிகவும் அதிகமாக இரத்தப் போக்கு நோயாளியை ஒடுக்கும் அளவிற்கு இருக்கும், ஆனால் உதிரப்போக்கு நாளுக்குநாள் அதன் அளவு மாறுபடும், அடி வயிற்று வலியும் கொஞ்சம் கடுமையாக இருக்கும்.
கருச்சிதைவை பல வகைகளாக பிரிக்கலாம் 
  • பயமுறுத்தும் கருச்சிதைவு 
  • தவிர்க்க முடியாத அல்லது முழுமையற்ற கருச்சிதைவு
  • முழுமையான கருச்சிதைவு
  • கருப்பை கழுத்து கருச்சிதைவு
  • தவறிய கருச்சிதைவு
  • காய்ச்சல் கருச்சிதைவு
  • சிகிச்சை முறை கருச்சிதைவு
  • சட்டவிரோதக் கருக்கலைப்பு 

பயமுறுத்தும் கருச்சிதைவு 
இவ்வகை கருச்சிதைவில் மாததீட்டு முடிந்து சில காலம் கழித்து விட்டு விட்டு அடிவயிற்றில் லேசான வலி இருக்கும். அதனோடு இடுப்பு வலியும், அடிக்கடி சிறுநீர் போதலும், லேசான உதிரபோக்கும் இருக்கும்.
  
தவிர்க்க முடியாத அல்லது முழுமையற்ற கருச்சிதைவு
இத்தகைய கருச்சிதைவில் கடுமையான வலியும், அதிகமான உதிரப்போக்கும் இருக்கும். சில சமயங்களில் கழுத்துப்பகுதியின் வழியாக கருத்தரித்த முட்டை துருத்திக் கொண்டு இருக்கும், இதனையே முழுமையற்ற கருச்சிதைவு என்போம்.
முழுமையான கருச்சிதைவு 
கருமுட்டை முழுவதுமாக வெளியேற்றப்பட்டால் அதனை முழுமையான கருச்சிதைவு என்கிறோம். இச்சிதைவில் வலியும் உதிரப்போக்கும் போகப்போக குறைந்து விடும்.
கருப்பை கழுத்து கருச்சிதைவு
இதில் கருமுட்டை கர்ப்பபையின் கழுத்து பகுதியிலே தங்கி விடும், இதனால் சிறிது உதிரபோக்கும், வலியும் இருக்கும்.
தவறிய கருச்சிதைவு
இதில் அறிகுறிகள் தோன்றி பின்னர் மறைந்து விடும். ஆனால், கரு முட்டை இறந்து வெளியேறாமல் கர்ப்பபையிலே தங்கி விடும். மேலும் வலியும் உதிரப்போக்கும் மெதுமெதுவாக நின்று விடும்.
காய்ச்சல் கருச்சிதைவு (தொற்று நோய் கருச்சிதைவு )
இதில் அறிகுறிகள் காய்ச்சல் அதிகரித்த பின்னரே தெரியும். இக்காய்ச்சலே  காரணமாக இருக்கலாம், இல்லையேல் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தொற்று மூலமாக காய்ச்சல் பரவி பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் பிறப்புறுப்பில் நாற்றமடிக்கக் கூடிய கசிவு ஏற்படும்.
சிகிச்சை முறை கருச்சிதைவு
தாய்க்கு சிகிச்சைக்காக கருவை கலைத்தால் அதனைச் சிகிச்சை முறை கருச்சிதைவு என்கிறோம். மேலும் தாய்க்கு கடுமையான இருதய நோய் இருந்தாலோ அல்லது வலிப்பு நோய், மன நோய், மிகையான வாந்தி, சிறுநீரக அழற்சி, அதிகமான இரத்த அழுத்த நோய், புற்று நோய், கருவிற்கு மரபணு குறை போன்றவை தென்பட்டால் கருவை கலைப்பது நல்லது.
சட்டவிரோதக் கருக்கலைப்பு
சட்டத்திற்கு புறம்பாக முறை தவறிய வழியில் உருவாகிய கர்ப்பத்தை கலைப்பதே ஆகும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here