முருங்கையின் மருத்துவ பயன்கள்

0
378

நம் சாப்பிடும் உணவில் அதிகம் இடம்பெறுவது முருங்கைகாய்தான். இதில் அதிக ஊட்டச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கிறது. பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இதில் உள்ளது.

முருங்கைக்காயில் கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்றவை போதிய அளவில் உள்ளன. 100 கிராம் முருங்கையில் 26 கலோரி இருக்கிறது.முருங்கைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நோய்கிருமிகள் நெருங்காது. உடல் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இதயம், ரத்த ஓட்டம் மற்றும் நரம்பு மண்டலத்தை சிறப்பாக இயங்கவைக்கும், குறிப்பாக பிஞ்சு முருங்கைக்காயில் அதிக அளவில் சத்துக்களும் நன்மைகளும் உள்ளது.வாயு கோளாறால் மிகவும் சிரமப்படுபவர்கள் வாரத்திற்கு 3 அல்லது 4 முறை உணவில் முருங்கைக்காயை சேர்த்துக்கொண்டால் வாயுக்கோளறு நீங்கும்.

நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிக்காமல் இருந்தால் முருங்கைக்காயையும் முருங்கைகீரையும் உணவில் சேர்த்துக்கொண்டால் அந்த கோளறு நீங்கும். அசைவ உணவுகளிலும் முருங்கைக்காயை சேர்த்துக்கொள்ள வேண்டும்.ஆஸ்துமாவால் சிரமப்படுபவர்கள் வாரத்திற்கு 3 முறை சேர்த்துக்கொண்டால் நோயின் கடுமை குறையும்.

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டுவந்தால் நோய் விரைவில் குணமாகும்.திருமணம் செய்யப்போகும் ஆண்கள் அடிக்கடி முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் முருங்கைக்கு ஆண்மையை விருத்தி செய்யும் சக்தி உள்ளது. அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் முருங்கைக்கீரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

முருங்கை பூவை பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டால் ஆண்மை பெருகும்.பித்தக்கோளறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், கண் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் முருங்கைக்காய் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும்.

முருங்கைக்காய்க்கு பல நோய்களை எளிதாக குணபடுத்தும் ஆற்றல் இருக்கிறது. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்கு ஆரோக்கியமும் உற்சாகம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here