சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

0
457

பெருஞ்சீரகம்

அஜீரணத்தை போக்கி வயிற்று உப்பிசத்தைக் குணப்படுத்தும் தன்மை பெருஞ்சீரகத்திற்கு உண்டு. அடிக்கடி வரும் உடல் நல குறைவைக் காட்டுவதாகும். இதையும் சரிசெய்து உடலைச் சீர்படுத்தும் தன்மை பெருஞ்சீரகத்திற்கு உண்டு.

பொதுவாக இறைச்சிக்கு மட்டும்தான் பெருஞ் சீரகத்தை சேர்க்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இவைகளில் ஜீரணசக்தியை அளிக்க வேண்டும் என்பதற்காக பெருஞ்சீரகத்தை சேர்க்கிறார்கள்.

பொதுவாக நல்ல ஜீரணசக்திக்கு பெருஞ்சீரகம் பெரிதும் உதவுகிறது. அசைவ உணவுகள் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகது. எனவேதான், இதற்கு கொஞ்சம் கூடுதலாக சேர்க்கிறர்கள்.

சீரகம்

உடம்பின் உட்பகுதியைச் சீர்படுத்துவதால்தான் இதற்கு சீரகம் (சீர்+அகம்) என்று பெயர். பித்த வாந்தி, வாய்வு சம்பந்தப்பட்ட நோய்கள், காச நோய்கள், ஆண்களுக்கு ஏற்படும் கல்லடைப்பு, கிராணி நோய், வாயுத்தொல்லைகள், பித்த நோய்கள் இவைகளைக்குணப்படுத்தும். கண்களு க்கு நல்ல குளிர்ச்சியைத் தரும்.

கருஞ் சீரகம்

கருஞ் சீரகம் சிறங்குகளைக் குணப்படுத்த உதவுகிறது. தலையில் எற்படும் கரப்பானைக் குணப்படுத்த தேங்காய் எண்ணெய்யில் இட்டுக்காய்ச்சி ஆற வைத்து கரப்பான் உள்ள இடத்தில் தொட்டுவைத்தால் குணமாகும். மேலும் உடலில் ஏற்படும் உட்சூட்டைத் தணிக்க பயன்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here