27 மார்., 2018

ஆஞ்சநேயர் வழிப்பாடும் அதன் பயன்களும்


தீவிர ராம பக்தரான ஆஞ்சநேயர் சிரஞ்சீவி பட்டம் பெற்றவராவார். இவரை வழிப்படுவதன் மூலம் பல்வேறு பயன்களை நாம் பெற முடியும். இனி,  இவரை எந்த முறையில் வழிப்பட்டால் என்ன பயன் கிடைக்கும் என்பது பற்றி பார்ப்போம்.

* ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிப்பட்டால், திருமணம் நடைபெறாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

*  வடைமாலை சார்த்தி வழிப்பட்டால் எதிரிகள் விலகுவர்.

*  துளசி மாலை சார்த்தி வழிப்பட்டால் தீராத நோய்கள் தீரும்.

* ஆஞ்சநேயர் சந்நிதியை வலம் வந்தால் ஏவல், பில்லி சூன்யம் நீங்கும்.

* படுக்கைக்கு செல்லும் முன் ஆஞ்சநேயர் கவசம் பாடினால் கெட்ட கனவுகள் தோன்றாது.

* ஆஞ்சநேயர் கழுத்தில் ஸ்ரீ ராம ஜெயம் எழுதி மாலை கட்டி போட்டால் சகல காரியமும் வெற்றி பெறும்.