6 மார்., 2018

ஆலயத்தில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா?

திருவண்ணாமலை சுவாமி ராஜகோபுரம் வழியாக வருவதில்லை பக்கத்துக்கு வாசல் வழியாகத்தான் வெளியே வருகிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில் மீன் வளராது. 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரே வீதிவலம் வருகிறார் .

குமரி மாவட்டம் கேரளபுரத்தில் சிவபெருமான் கோவில் உள்ளது. இங்கு மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் உள்ளது.

எல்லா கோவிலிலும் பெருமாள் இடது கையில் சங்கு காணப்படும். திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு இருக்கும். 

காசியில் பல்லிகள் இருந்தாலும் அது ஒலிப்பதில்லை.

காசி நகரை சுற்றி  45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.

ரத்தினகிரி முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் தயிராக மாறும் .

ரத்தினகிரி மலை மீது காகம் பறப்பதில்லை. 

சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் புளிப்பதில்லை.

ஆழ்வார்குறிச்சி நடராஜர் சிலை ஒரே கல்லால் ஆனது , அதை தட்டினால் வெண்கல ஓசை வரும்.

சமயபுரம் மாரியம்மன் திருமேனி மூலிகைகளால் ஆனது .

இமயமலை பத்ரிநாத் கோவில் நவம்பர் மாதம் மூடப்படும்,அப்போது ஏற்றும் தீபம் மீண்டும் நடை திறக்கும் வரை எரியும்,சுமார் ஆறு மாத காலம் அந்த தீபம் எரியும் என்கிறார்கள்.