24 மார்., 2018

கடல் அலைகள் என்னென்ன காரணங்களால் எழுகின்றன?காற்றின் அசைவுகளாலும் சூரியன், சந்திரன் இவைகளின் ஈர்ப்புத் திறனாலும், பூமியின் அதிர்வு காரணமாகவும் கடலில் அலைகள் எழும்புகிறது.

கடலின் அடியில் எரிமலைகள் வெடிப்பதாலும் கடல் கொந்தளிப்புடன் உயர்ந்த அலைகள் உருவாகின்றன.

புயல்காற்று கடலில் மிக உயரமான அலைகளைத் தோற்றுவிக்கும். சில சமயங்களில் பனைமர உயரத்திற்குக் கூட கடலில் அலைகள் உயர்ந்து மிகுந்த சேதங்களை விளைவிக்கும்.

அமாவாசை மற்றும் பௌர்னமி அன்று அதிக அலைகள் ஏன்?

ஓவ்வொரு அமாவாசை அன்றும், பௌர்னமி அன்றும் சூரியனும், சந்திரனும் ஒரே நேர்முகமாக இருக்கும். அதனால் சூரியனின் ஈர்ப்புச் சக்தியும், சந்திரனின் ஈர்ப்புச் சக்தியும் ஒரே நேர் கோட்டில் இருக்கும் அதனால் அந்த திணங்களில் மட்டும் அலைகள் உயரம் வழக்கத்தை விட சீற்றத்துடன் இருக்கும்.