25 மார்., 2018

பேரீச்சம்பழத்தின் நன்மைகள் என்ன?

பேரீச்சம்பழத்தில் புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம்,

மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், மக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் -A, வைட்டமின் -B, வைட்டமின் -E, வைட்டமின் -B2 வைட்டமின் -,B5 போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகிறது.


மருத்துவ பயன்கள்

மாலைக்கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எல்லா சத்துகளும் கிடைத்து கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாத விலக்கை நிவர்த்தி செய்ய பேரீச்சம் பழம் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.

ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடலின் எடையை அதிகரிக்க தினமும் காலையில் பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதால், அப்பழத்தில் இருக்கும் வைட்டமின் மற்றும் புரதம் போன்றவை உடல் எடையினை அதிகரிக்கச் செய்கிறது.

தினமும் பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.

பேரீச்சம் பழத்தில் நிறைய வைட்டமின் A,B இருப்பதால், இவை சருமத்தை மிருதுவாக்கி, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் தழும்புகள் மறைவதற்கு பயன்படுகிறது.

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை பேரீச்சம் பழத்தில் இருப்பதால், இவை ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

பேரீச்சம் பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் C,B6 போன்றவை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை சீராக வைத்து ரத்த சோகை பிரச்சனையை தீர்க்கிறது.

முதியவர்களுக்கு உண்டாகும் கை, கால் மூட்டு வலி போன்றவற்றை இந்த பேரீச்சம் பழம் குணப்படுத்துகிறது.

சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு பேரீச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சிய பின் அதை குடித்து வந்தால் குணமாகும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தை மற்றும் தாய் நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.