வெங்காயம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

0
40
உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெங்காயத்தை கொண்டு பல்வேறு உணவுகள் தயார் செய்து சாப்பிடலாம்.
வெங்காய சாம்பார், வெங்காய வடகம், வெங்காயச் சட்னி, வெங்காயப் பச்சடி என பல்வேறு வகைகள் உள்ளன.
வெங்காய பச்சடி
வெங்காயத்தைக் குறுக குறுக அறிஞ்சு, அதில் மோர் விட்டுக் கலந்து கொஞ்சம் உப்பு, மிளகு சீரகம் போட்டு தாளிச்சிட்டா வெங்காயப் பச்சடி தயார். பகல் உணவில் இதனை சேர்த்து சாப்பிடலாம்.
பயன்கள்
பொதுவாக வெங்காயம் நச்சுக்கிருமிக் கொல்லியாக உடம்பை மெலிதாக்க குரலை இனிமையாக்கி, விஷக்கடி, குழிப்புண்களைக் கட்டுப்படுத்த பித்தம் தணிய, மூளை சுறுசுறுப்பாக, கால் கை வலிப்பு நோய் நீங்க, கொழுப்புச் சத்தை கரைக்க, வயிற்றுக் கட்டிகளை நீக்க எனப் பல வகையிலும் பயன்படும்.
பக்கவாதம், இரத்தக்குழாய் அடைப்பு நோய்க்கு பச்சை வெங்காயம் முழு பலன் தருவதாக சமீபத்தில் கிங்ஜார்ஜீ மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்ல, புகை, பிடிப்பதால் ஏற்படும் நிகோடின் என்னும் நஞ்சினை முறித்து நுரையீரலுக்கும் இதயத்திற்கும் வலிமையை தருகிறது.
இதில் மற்றுமொரு உண்மையாக ரோமானிய நாட்டில் இடைமெலிந்திருக்க பெண்கள் வெங்காயத்தைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பு
தீவிர இரத்த சோகை இருப்பவர்கள் மட்டும் அதிகளவு வெங்காயத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here