பிளாக்கர் பயன்பாடும் அதன் எல்லைகளும் தொியுமா?

0
330

பிளாக்கர் தளம், நாம் நமது தனிப்பட்ட கருத்துக்களை தொிவிக்கவும், அதன் மூலம் இணையத்தில் சுய  வருமானம் ஈட்டவும் முடிகிறது. நல்ல எழுத்து திறமை உள்ளவர்கள் மிக குறைந்த முதலிட்டில் பிளாக் தொடங்கி நல்ல வருவாயை ஈட்டலாம். அதேபோல், பிளாக்கிற்கும் சில எல்லைகள் உண்டு, அவைகளை இப்போது பாா்க்கலாம்.

எத்தனை பிளாக் தொடங்கலாம் – ஒருவா் எத்தனை பிளாக் வேண்டுமனாலும் தொடங்கி பயன்படுத்தலாம். இவ்வளவு தான் பயன்படுத்த வேண்டும என்ற வரைமுறை இல்லை.

எத்தனை பதிவுகள் உருவாக்கலாம் – இதற்கு எல்லையில்லை, நீங்கள் எவ்வளவு பதிவு வேண்டுமனாலும் இடலாம்.

பதிவின் அளவு எவ்வளவு – நீங்கள் உருவாக்கும் பதிவு எவ்வளவு பொிதாகவும் இருக்கலாம், ஆனால், பதிவில் அதிக படங்களை பயன்படுத்தினால் உங்கள் பக்கம் முழுமையாக திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் அதனால் உங்களது வாசகர்களை இழக்க நேரிடும்.

பக்கங்களின் அளவு எவ்வளவு – பக்கங்களின் அளவு 1mb அளவுக்கு மேல் இருந்தால், உங்களது பக்கம் திறக்கும் போது “006 Please contact blogger support” என்ற பிழை செய்தி வரும்.

கருத்துக்களின் எண்ணிக்கை (Comments) – ஒரு பதிவில் எண்ணில் அடங்கா கருத்துக்களை பதிவிடலாம்.

படங்களின் அளவு (Pictures) – ஒரு பிளாக்கில் அதிகபட்சமாக 1GB அளவிற்கு படங்களை கூகுள் பிகாசா மூலம் பகிா்ந்து கொள்ளலாம்.

உறுப்பினர் குழு (Authors) – ஒரு குழுவாக இருந்து பதிவுகளை வெளியிடுவோா் எண்ணிக்கை ஒரு பிளாக்கிற்கு 100 நபா்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

வலைப்பதிவு விளக்கம் (Blog Description) – இதில் அதிகப்பட்சம் 500 எழுத்துக்களை பயன்படுத்தலாம். Profile interests and Favorites இதில் அதிக பட்சம் 2000 எழுத்துக்களை பயன்படுத்தலாம்.

வலைப்பதிவு தலைப்பு (Blog Title) – இதில் அதிகபட்சம் 90 எழுத்துக்களை பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here