பாலாடைக்கட்டி – பன்னீர் எது ஆரோக்கியம்?

0
415
இன்றைய நவீன உலகின் மனிதர்கள் உட்கொள்ளும் உணவில் காய்கறிகள் இடம்பிடிக்கிறதோ இல்லையோ பன்னீர், பாலாடைக்கட்டிகள் (Cheeses) ஆகிய இரண்டும் கட்டாயம் இருக்கும்.
பால் வகையை சேர்ந்த இந்த இரண்டு உணவுகளையும் பிரட், தோசை என எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறோம், இவை ஆரோக்கியமானது என்றாலும் கூட ஒருவகையில் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதுதான்.
பாலாடைக்கட்டி (Cheese)

பாலாடைக்கட்டியில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது.

மேலும், வைட்டமின் ஏ டி மற்றும் வைட்டமின் பி12, பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் உள்ளன, மேலும் 10 கிராம் பாலாடைக்கட்டியில் 33 கிராம் கொழுப்பு உள்ளது.
பாலாடைக்கட்டி ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக சீஸில் அதிக அளவில் உப்பும், ப்ரிசர்வேடிவ்ஸும் சேர்க்கப்படுகின்றன.
பாலாடைக்கட்டியை குளிரூட்டியில் வைத்து மட்டுமே பயன்படுத்த முடியும். பாஸ்தா, பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளில் அதிக அளவு பாலாடைக்கட்டி சேர்த்து செய்கிறார்கள்.
இது உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகமாக்கிவிடும்.
பன்னீர்

100 கிராம் பன்னீரில் 18 கிராம் புரோட்டின் சத்து நிறைந்துள்ளது, இந்த புரோட்டின் சத்தானது உடலில் உள்ள தசைகளின் வலிமைக்கு உதவுகிறது.

பன்னீரும் பாலில் இருந்து இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால், பாலில் கிடைக்கும் அனைத்து சத்துக்களும் பன்னீரில் இருந்து கிடைக்கின்றன, மேலும் கால்சியம் சத்து அதிகளவில் நிறைந்துள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும், புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது, அதுமட்டுமின்றி இதயநோய்களிலிலுந்தும் தடுக்கிறது.
பன்னீரை எப்படி சமையலில் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். சிலர் எண்ணெயில் வறுத்த பன்னீரை உணவில் சேர்ப்பார்கள்.
இது ஆரோக்கியமல்ல. கீரையுடன் சேர்த்து செய்யும் பாலக் பன்னீர், எண்ணெய் இல்லாமல் செய்யும் பன்னீர் டிக்கா ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். பன்னீர் கலந்த உணவுகளையும் அடிக்கடி எடுத்துக் கொள்ளாமல், வாரம் இரு முறை என்று அளவோடு உட்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here