சளி, காய்ச்சல் இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்

0
292
சளி, காய்ச்சல் பிடித்தால், அவர் உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் இப்பிரச்சனையை மோசமாக்கும். சளி, காய்ச்சல் பிடித்திருக்கும் போது சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். சரி இப்போது சளி பிடித்திருக்கும் போது சாப்பிடக்கூடாத உணவுகள் பற்றி பார்க்கலாம்.
** பால் பொருட்களை சளி பிடித்திருக்கும் நேரத்தில் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது சளியின் அளவை அதிகரித்து, நோய்க்கிருமிகளின் தாக்கத்தை அதிகரிக்கும். ஆகவே சளி பிடித்திருந்தால், பால் பொருட்களை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
** அசிட்டிக் உணவுகளை சளி பிடித்திருக்கும் போது முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும். இறைச்சிகளில் அசிடிட்டி அளவு அதிகமாக இருப்பதால், அது உடலில் உள்ள இயற்கை அமிலங்களுக்கு இடையூறை ஏற்படுத்தும்.
** கொழுப்புமிக்க உணவுகளில் ஃபேட்டி அமிலங்கள் அதிகம் உள்ளதால், அவை உடலுக்கு பெரும் தொந்தரவைக் கொடுக்கும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகளையோ, ஜங்க் உணவுகளையோ சளி பிடித்திருக்கும் போது, முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
** ஆல்கஹால் எடுத்தால், எப்பேற்பட்ட சளியும் நீங்கும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து, உடல் வறட்சி அதிகரித்து, சளியின் அளவு மட்டுமின்றி, காய்ச்சலும் அதிகரித்துவிடும்.
** துரித உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இல்லை மற்றும் கலோரிகள் ஏராளமாக உள்ளது. இத்தகைய உணவை உடல்நிலை சரியில்லாத காலத்தில் உட்கொண்டு வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் குறைந்துவிடும். எனவே இந்த மாதிரியான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
* நோய்வாய்ப்பட்டிருக்கும் காலத்தில் ஜூஸ் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here