உடல் எடையை குறைக்க போறீங்களா? இதோ உங்களுக்கான பழங்கள்

0
347
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சரியான உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டியது அவசியம்.
எடையை அதிகரிக்க நினைப்போர் சர்க்கரை அதிகம் உள்ள பழங்களையும், எடையை குறைக்க நினைப்பவர்கள் சர்க்கரை குறைவாக உள்ள பழங்களையும் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டும்.
* தினமும் காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை பழத்தை ஜூஸ் போட்டு வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை வேகமாக குறையும்.
* ப்ளாக்பெரியில் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால் டயட்டில் இருக்கும் போது இதனை உட்கொள்ளலாம்.
* இதேபோன்று வைட்டமின் சி அதிகமுள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தை உட்கொள்ளலாம்.
* பொட்டாசியம், வைட்டமின் சி அதிகமுள்ள அதேநேரத்தில் சர்க்கரை குறைவாகவுள்ள  பப்பாளி பழத்தை சாப்பிட்டாலும் உடல் எடை குறையும்.
* தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்தும், 10 சதவீதம் சர்க்கரையும் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டால், வயிறு விரைவில் நிறைவதோடு, உடல் எடையும் குறையும்.
* உட‌ற்பருமனாக இரு‌ப்பவ‌ர்க‌ள் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வ‌ந்தா‌ல் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு ஒரு ‌நிலையான தன்மைக்கு வருவதால் உடற்பருமன் குறைவதாக மரு‌த்துவ ஆ‌ய்வுக‌ள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here