யாரை எப்படி வணங்க‌ வேண்டும்

0
442
தெய்வத்தை வழிபடும் போதும், பொதுவாக மற்றவர்களை நாம் சந்திக்கும் போதும் நம்முடைய இரு கைகளையும் இணைத்து குவித்து  கும்பிடுகிறோம்.
இதற்கான தத்துவம் என்னவென்றால்..
நமது உடல் ஐந்து கோசங்களால் ஆனது.
உணவினால் ஆனது  – அன்ன மயக்கோசம்
மூச்சுக்காற்றினால் ஆனது  – பிராண மயக்கோசம்
எண்ணங்களால் ஆனது  – மனோ மயக்கோசம்
அறிவினால் ஆனது –  விஞ்ஞான மயக்கோசம்
மகிழ்ச்சியினால் ஆனது  – ஆனந்த மயக்கோசம்
இந்த ஐந்து கோசங்களையும் காப்பாற்றுவது நம்முள் இருக்கும் ஆன்மா. நம்முடைய ஐந்து விரல்களும், இந்த ஐந்து கோசங்களையும், உள்ளங்கை ஆன்மாவையும் குறிக்கும்.
இதே அமைப்பு மற்றவர்களிடம் இருந்தாலும், ‘ஆன்மா ஒன்றே’ என்கிற மனோபாவத்தில் இரு கைகளையும் இனைத்துக் கும்பிடுகிறோம்.
இறைவனைக் கும்பிடும் போது இரு கைகளையும் இணைப்பது, பரமாத்மா ஜீவாத்மா ஐக்கியத்தை தெரியப்படுத்துகிறது.
கும்பிடும்போது சில முறைகள் இருக்கின்றன.
  • தெய்வங்கள், மகான்கள், சித்தர்கள், இவர்களை தலைக்கு மேல் கரங்களை உயர்த்தி கும்பிட வேண்டும்.
  • ஆசிரியரையும், குருவையும் கும்பிடும் போது, குவித்த கரங்களை உயர்த்தி கும்பிட வேண்டும்.
  • தாயை, வயிற்றின் முன் கரம் கூப்பி வணங்க வேண்டும்.
  • தந்தை, அரசன் இவர்களை நம் வாய்க்கு நேராக கைகளை இணைத்து கும்பிட வேண்டும்.
  • மற்றவர்களை, நாம் நம் மார்பு கரம் சேர்த்து கும்பிட வேண்டும்.