20 மார்., 2018

இருமல் நீங்க இயற்க்கை தரும் மருத்துவம் என்ன

கற்பூர வள்ளி இலைச்சாறுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால் குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும்

திப்பிலியை வறுத்து பொடி செய்து தேனில் குழைத்து கொடுத்தால் வறட்டு இருமல் குணமாகும்


பசும்பாலுடன் ஒரு ஸ்பூன் மஞ்சள்தூள், சிறிது மிளகுதூள் சேர்த்து கலக்கி குடித்தால் இருமல் தணியும்.

இஞ்சி சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சை சாறு சமஅளவு எடுத்து கொள்ளவும், ஒரு ஸ்பூன் அளவு மூன்று நாள் சாப்பிட்டால் இழைப்பு இருமல் குணமாகும்.

துளசியை தினமும் கொஞ்சம் சாப்பிட்டால் கோழை இருமல் நீங்கும், இதை தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்வு கிடைக்கும்.

மிளகுதூள், பனை வெல்லத்தை சேர்த்து பிசைந்து சுண்டைக்காய் அளவு சாப்பிட்டால் சூட்டு இருமல் சரியாகும்.

10 கிராம் சீரகத்தை வறுத்து தூள் செய்து, அதே அளவு கற்கண்டு கலந்து கொள்ளவும். இதனை காலை, மாலையில் அரை ஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் 5 நாளில் இருமல் குணமாகும்
.
வெள்ளைப் பூண்டை உரித்து நெய்யில் வதக்கி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் கக்குவான் இருமல் குணமாகும்.