உடலுக்கு மட்டுமல்ல உறவு, ஆரோக்கியத்திற்கும் தான்!

0
339
Caucasian couple arguing on sofa
உண்ணும் உணவே தினசரி ஒரே மாதிரி இருந்தால் போரடித்து விடும். அதேபோலதான் தாம்பத்யத்திலும் புதிதாக புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உற்சாகமும், புத்துணர்ச்சியும் கிடைக்கும் என்கின்றனர் உளவியலாளர்கள். உங்கள் தாம்பத்ய வாழ்க்கையை நித்தம் நித்தம் புதுப்பிக்க அவர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
மனதிற்கான உற்சாகம்
தாம்பத்ய உறவு என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல மனதோடும் தொடர்புடையது. பெரும்பாலான தம்பதியர் உடல் தேவைக்காக மட்டுமே இணைவதே அவர்கள் செய்யும் தவறாகும். அதேபோல் தாம்பத்யம் என்பது மன ஆரோக்கியத்தோடும், உடல் ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நிபுணர்கள்.
எதிர்பாலினரை கவரவேண்டும் என்பதற்காக தாம்பத்ய உறவின் ஆரம்ப செயல்பாடுகள் உள்ளன. பின்னர் நாளடைவில் மன ஆறுதலுக்காக தாம்பத்ய தேடல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அணைக்கின்ற கரங்கள்தான் உறவை புதுப்பித்துக்கொள்ள உதவுகிறது. உணர்வு ரீதியான இந்த ஆறுதல் தம்பதியரிடையே உறவுப் பிணைப்பை அதிகரிக்கிறது.
உற்சாகமான தாம்பத்திய உறவுஉடலுறவு
வாழ்வியலில் தாம்பத்யம் என்பது அவசியமான ஒன்று அது மனிதர்களின் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது. அது சிறந்த உடற்பயிற்சியாகவும் செயல்படுகிறது. தாம்பத்யம் ஈடுபாட்டின் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதயத்திற்கு ஆரோக்கியம் தருகிறது.
எண்ணற்ற நச்சுக் கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றன. அதேபோல் முத்தமிடுவதன் மூலம் முகத்தில் உள்ள தசைகள் செயல்படுகின்றன. உடல் பூரிப்படைகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே தம்பதியர் உடலுக்கும் மனதிற்கும் உற்சாகம் தரும் இந்த உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்ளவேண்டும் என்கின்றனர். இதனால் மனதிற்கும் ஒரு மன திருப்தி  கிடைக்கிறது. இந்த தாம்பத்ய வாழ்க்கை போரடிக்காமல் இருக்க உடலுக்கு உற்சாகம் தரும் நடனம், விளையாட்டு போன்றவைகளில் ஈடுபாடு காட்டவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
சத்தான உணவுகள்
தாம்பத்யத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்த வயதானவர்கள் சிலர் வயகாரா போன்ற உற்சாகமூட்டும் மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். தங்கள் துணைவருக்கும் அதை பரிந்துரைக்கின்றனர். ஆனால் தாம்பத்ய வாழ்க்கையை புதுப்பிக்க இயற்கையான முறையே சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
ஆரோக்கியமான உணவு உண்பதன் மூலம் டெஸ்டோஸ்ரோன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்யமுடியும் என்கின்றனர். அதேபோல் தாம்பாத்ய ஈடுபாட்டிற்கான லிபிடோ சக்தியை உற்சாகமூட்ட முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வைட்டமின் பி12, துத்தநாகம், வைட்டமின் சி அடங்கிய உணவுகளை உட்கொண்டால் பெண்களுக்கு உற்சாகம் பிறக்கும், ஆண்களுக்கும் ஆண்மை தன்மை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
உற்சாகமான பேச்சுக்கள்
தம்பதியரிடையே இயந்திரத்தனமான செயல்பாடு இருந்தாலும் நிச்சயம் போரடிக்கும். எனவே உற்சாகம் தரக்கூடிய கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய பேச்சுக்களை தம்பதியர் பரிமாறிக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் தாம்பத்திய உறவின் நெருப்பு அணையாமல் பாதுகாக்க முடியும்.
இருபதுகளில் உடல் தேவைக்காக ஏற்படும் தாம்பத்யம் நாற்பது, ஐம்பதுகளில் ஆரோக்கியம் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே நித்தம் நித்தம் உறவை புதுப்பிக்க உற்சாகத்துடன் அணுகவேண்டும் என்பதே நிபுணர்களின் ஆலோசனையாகும். அப்பொழுதுதான் திருமண பந்தமும் முறிந்து போகாமல் தழைத்து ஓங்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here