அடிக்கடி தாம்பத்தியம், அளவில்லா ஆரோக்கியம்

0
429
எதைச் செய்தால் இளமையாக இருக்கலாம்… இது எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விதான். ஆனால் எதையும் செய்யாமல் சிம்பிளாக ஒன்றே ஒன்றை மட்டும் ரெகுலராக செய்து வந்தாலே போதும் நோய் நொடி அண்டாமல், மகிழ்ச்சியாக, நல்ல உடல் நலத்துடன் இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள் – அது தாம்பத்தியம்.
தாம்பத்திய உறவு நமது மனதுக்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் பல நன்மைகளை கொண்டு வருகிறதாம். தாம்பத்தியதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன தெரியுமா…
இதயத் துடிப்பு சீராக இருக்கும்
ரெகுலராக தாம்பத்தியம் வைத்துக் கொள்வோருக்கு இதயத் துடிப்பு சீராக இருக்குமாம். மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையுமாம். மேலும் வயதானவர்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளும்போது அவர்களுக்கு மாரடைப்பு வரலாம் என்ற வாதம் தவறானது.
மாறாக வயதானவர்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளும்போது அவர்களுக்கு இதயத் துடிப்பு நல்ல சீரான நிலையில் இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
30, 40, 50 வயதுகளிலும் அதற்குப் பிறகும் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளும் எந்த ஆணுமே மாரடைப்பு அபாயத்தில் இருப்பதாக இதுரை நிரூபிக்கப்படவில்லை என்பது டாக்டர்களின் வாதம்.
ஆண்குறி எழுச்சிப் பிரச்சினை வராது
சீரான, முறையான, தொடர்ச்சியான தாம்பத்திய உறவை கடைப்பிடிப்போருக்கு ஆண் குறி எழுச்சியின்மை பிரச்சினை வரவே வராது என்பது இன்னொரு விஷயம். வாரத்திற்கு குறைந்தது 2 முறை தாம்பத்தியம் வைத்துக் கொள்வது நல்லதாம். இப்படிப்பட்டவர்களுக்கு ஆண் குறி எழுச்சியின்மை பிரச்சினை குறைகிறதாம்.
மன அழுத்தம் குறையும்
தொடர்ந்து தாம்பத்திய உறவை மேற்கொள்வோருக்கு மன அழுத்தம் வெகுவாக குறைகிறதாம். மேலும் மன நிம்மதி அதிகரிக்கிறதாம். குறிப்பாக நடுத்தர வயதினருக்கு மன அழுத்தத்தைப் போக்கும் நல்ல மருந்தாக தாம்பத்தியம் இருக்கிறதாம்.
உடல் எடை குறையும்
தாம்பத்திய உறவு என்பதே ஒரு நல்ல உடற்பயிற்சிதான். எனவே தொடர்ச்சியாக தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வோருக்கு உடல் எடை அதிகரிப்புப் பிரச்சினை வருவதில்லையாம். மாறாக ஏகப்பட்ட கலோரிகள் குறைவதால் உடல் எடையும் குறைந்து ஸ்லிம்மாக காட்சி தருவார்களாம்.
ஒரு முறை தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு அரை மணி நேரம் உடற் பயிற்சி செய்ததற்குச் சமமாம்.
மகிழ்ச்சி அதிகரிக்கும்
தாம்பத்திய உறவின்போது மகிழ்ச்சியை அதிகரிக்க உதவும் என்டோப்ரீன் ஹார்மோன்கள் அதிக அளவில் வெளியாகிறதாம். இதனால் மகிழ்ச்சி அதிகரிக்கிறதாம்.
‘ஃபிட்’டாக இருப்பீர்கள்
உடல் ரீதியான இன்பம் பூர்த்தியாகும்போது உடல் பொலிவும் கூடுகிறதாம். தாம்பத்திய உறவில் தொடர்ச்சியாக ஈடுபடுவோருக்கு மனம், உடல் ஆகிய இரண்டுமே ‘ஃபிட்’டாக இருக்குமாம்.
இதற்குக் காரணம், உடலில் உள்ள தசைகள், தாம்பத்திய உறவின்போது நன்கு செயல்படுகிறது. இதன் காரணமாக தேவையில்லாத கொழுப்பு குறைந்து, தோற்றப் பொலிவு கூடுகிறதாம்.
சளி பிடிக்காதுங்க…
வாரத்திற்கு 2 முறைக்கும் மேல் உறவு கொள்வோருக்கு இம்யூனோ குளோபுலின் ஏ அதிகம் சுரக்கிறதாம். இது சளி, காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்கக் கூடிய சக்தி படைத்தது. எனவே தொடர்ச்சியாக உறவு வைத்துக் கொள்வோரை அவ்வளவு எளிதில் காய்ச்சல், சளி அண்டாதாம்.
என்றும் இளமை
தொடர்ச்சியான உறவு என்பது நமக்கு வயதாகி வருவதை மறக்கச் செய்யும். எப்போதும் உற்சாகத்துடன் இருப்பதால் என்றும் இளமையாக நம்மைக் காட்ட உதவும். வைட்டமின் டி, உறவின் காரணமாக நமது தோலில் அதிகரிக்கிறதாம். இதனால் தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து நம்மை மார்க்கண்டேயனாக காட்ட உதவும்.
வாழ்நாள் நீடிக்கும்
தாம்பத்திய உறவுக்கு வாழ்நாளை நீட்டிக்கும் சக்தியும் கூட உண்டு. மாதத்திற்கு ஒரு முறை உறவு வைத்திருப்பவர்களை விட வாரத்திற்கு 2 முறை உறவு கொள்வோருக்கு வாழும் நாள் இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் கூறுகிறார்கள்.
மொத்தத்தில் தாம்பத்தியம் என்பது பாலியல் சந்தோஷம் மட்டும் அல்ல, நமது வாழ்நாள் சந்தோஷத்தையும் கூட உள்ளடக்கியதாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here