பெண்கள் குரல் இனிமையாக இருப்பது ஏன்?

0
505

பொதுவாக, ஆண்களின் குரலைவிடப் பெண்ணின் குரல் இனிமையானது. ஆண்களின் குரல் 11-12 வயது வரை பெண்களின் குரல் போன்றுள்ளது.

இவ்வயதிற்குப் பிறகு, குரல் கரகரப்பாக மாறுகிறது. இருப்பினும் பெண் குழந்தைகளில் இவ்வயதிற்க்குப் பிறகு, குரலில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.

12-13 ஆவது வயதைப் பால் பருவமடையும் காலம் எனபர். இவ்வயதில் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் சில “பால்” வேற்றுமையை உண்டாக்கும். ஹார்மோன்களைச் சுரந்து கொட்ட ஆரம்பிக்கின்றன. இந்த ஹார்மோன்கள், ஆண், பெண் உடலின் பாலினத்திற்கு ஏற்ப அநேக வேற்றுமை குணாதிசயங்களைத் தோற்றுவிக்கின்றன.

ஆண்களில் இந்த ஹார்மோன்கள், கை, முகம் போன்ற பகுதிகளில் ரோமங்கள் தோன்றவும் மேலும் வளரவும் முக்கியமானவை. இதனால், ஆண்களின் குரலில் கரகரப்புத் தோன்றுகிறது. இந்நாளமில்லாச் சுரப்பிகள் சுரக்கும் ஹார்மோன்களுள் ஒன்று டெஸ்டோஸ்டிரான் என்ப்படும்.

இது ஒலி எழுப்பும் நாணின் நீளத்தையும், பருமனையும் அதிகப்படுத்துகிறது. மேலும் ஒலிப்பயையும் மாற்றுகிறது.

இதனால் ஒலி நாணின் அதிர்வு நிலை மாறுபட்டு குரலின் உச்சநிலை வேறுபடுகிறது.

இவ்வகையான ஹார்மோன்கள் பெண்களிடம் காணப்படாது போனாலும் மிக குறைந்த மாற்றமே ஏற்படுகிறது. தொண்டை, வாய், மூக்கு, மேல் தாடைகள் ஆகியவை ஏற்படுகிறது. இதனால் பெண்களின் குரல் இனிமையாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here