நிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்
பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை. 

இருந்தாலும் மறதி ஒரு தேசிய வியாதி. ஆகவே பேராசிரியை நிர்மலா தேவி வழக்கும் வழக்கம் போல் ஒன்னும் ஆகாது.

நாட்டை நேசிப்பவர்கள் யாரும் டென்ஷன் ஆக வேண்டாம். ஏனென்றால் பல வழக்குகளுக்கு விடை தெரியாமல் இருக்கிறோம்.

75 நாள் ஜெயலலிதாவுக்கு என்னாச்சு தெரியவில்லை.

2 கண்டெய்னர் பணம் என்னாச்சு தெரியவில்லை.

ரயிலில் 500 கோடி கொள்ளை என்னாச்சு தெரியவில்லை
.
ராம மோகன ராம் ரெய்டு என்னாச்சு தெரியவில்லை.

விஜயபாஸ்கரன் ரெய்டு என்னாச்சு தெரியவில்லை.

சரத்குமார் ரெய்டு என்னாச்சு தெரியவில்லை.

1800 பேர் கூடி 180 வீடுகளில் சசிகலா குடும்பத்தின் ரெய்டு என்னாச்சு தெரியவில்லை.

தொடர்ந்து ஜவுளிகடை நகைகடை மற்றும் தொழிலதிபர்கள் வீட்டில் ரெய்டு என்னாச்சு தெரியவில்லை.

காவேரி மேலாண்மை விசாரணை என்னாகும் தெரியவில்லை.

ஸ்டெர்லைட் ஆலை விசாரணை என்னாகும் தெரியவில்லை.

ஆஷிபா மரணம் விசாரணை என்னாகும் தெரியவில்லை.

இதான் நம் டிஜிட்டல் இந்தியா
நேர்மையான இந்தியா

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, நாளைக்கு வேற பிரேக்கிங் நியூஸ் வரும்.அப்போது இந்த நிர்மலா தேவி பிரச்சனை தானாக மறைந்து விடும். 
                  மறதி ஒரு தேசிய வியாதி

Blogger இயக்குவது.