Header Ads

அஜித் பற்றிய சில உண்மைகள்



காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர். 2012 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற மனிதர்களில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார். 2014 ம் ஆண்டில் 51 வது இடத்தை பிடித்தார்.

 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த நடிகை சாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்

இதுவரை மூன்று பிலிம்பேர் விருதுகளும் மூன்று விஜய் விருதுகளும் வாங்கியுள்ளார். 

ஒரு கல்லூரி விழாவில் மாணவர்கள் இயக்குனர் கௌதம் மேனனை பார்த்து எங்க "தலய" வைத்து எப்போது படம் எடுப்பீர்கள் என்று கேட்ட போது தல அப்படினா யாரு என்று கேட்டார். அதன் பிறகு கௌதம் எடுத்த படங்கள் தோல்வி அடைந்த பிறகு அவரை அழைத்து வாய்ப்பு கொடுத்தவர் அஜித். அந்த படம்தான் என்னை அறிந்தால்.

அஜித் தவற விட்ட வெற்றிப்படங்கள்

லவ் டுடே, காக்க காக்க, ரன், கோ, சாமி, நந்தா, ஜெமினி, ஜீன்ஸ் இந்தப்படங்கள் எல்லாமே அஜித்திடம் சொல்லி வேற நடிகர்கள் நடித்த படங்கள்.

மக்களை மதிக்க தெரிந்த ஒரு நடிகர்.  இவர் பல உதவிகளை செய்துவருகிறார்

மேலும் சினிமா துறையில் சாதனை படைக்க வேண்டும் என அனைவரின் சார்பாக வாழ்த்துக்களையும் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.

Blogger இயக்குவது.