ஜப்பானில் சாதனை படைத்த முதல் இந்திய திரைப்படம்

0
192


ஜப்பானில் அதிகம் வசூலித்து சாதனை படைத்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமை ரஜினிகாந்த், மீனா நடித்த “முத்து” படத்திற்கு கிடைத்துள்ளது. 
முத்து திரைப்படம் 1995 ம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த படமாகும். தற்போது இந்த படம் ஜப்பானில் ‘டேன்சிங் மகாராஜா’ என்ற பெயரில் வெளியாகி, 1 புள்ளி 6 மில்லியன் டாலர் வசூலித்தது.

அமீர்கான் நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ் திரைப்படம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி 2 திரைப்படம் 1 புள்ளி 3 மில்லியன் டாலர் வசூலித்து 3ஆம் இடத்தை பிடித்துள்ளது.