ஆண்மை அதிகரிக்க மிக எளிமையான வழி

ஆண்மை அதிகரிக்க பக்க விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவமே சிறந்தது. படித்து பயன்பெறுங்கள்.

வில்வபட்டை, சீரகம் இரண்டையும் நன்றாக இடித்து பொடி செய்து நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

தாளிக்கீரையை நன்கு சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர விந்து குறைபாடு குறையும்.

12 பாதம் பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து அரைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். காய்ந்த திராட்சையோடு அதிமதுரப் பொடியை சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும்.

முருங்கை இலை, பொன்னாங்கண்ணி கீரை, தூதுவளை கீரை, கரிசலாங்கண்ணி கீரை இதில் ஏதேனும் ஒரு கீரையை தினமும் சமைத்து சாப்பிட உணர்வு மேலோங்கும்.

கருப்பட்டி கலந்த தேங்காய் பால், அதில் கொஞ்சம் ஏலக்காய் தூள் தூவி சாப்பிட ஆண்மை உணர்வு கூடும்.

விந்து கெட்டியாக என்ன செய்ய வேண்டும்?

குருந்தட்டி வேரை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நீர்த்துப்போன விந்து கெட்டியாகும்.

அமுக்குரா வேரை பொடியாக்கி நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வர விந்தணுக்கள் பெருகிகெட்டிப்படும்.

உடல் உறுதியாக

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என 48 நாட்கள் தொடந்து சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும். காலையில் 15 மி.லி இஞ்சிச்சாறு, மதியம் சுக்கு, பனைவெல்லம் கலந்த பொடி ஒரு தேக்கரண்டி, மாலையில் கடுக்காய் அரை தேக்கரண்டி தேனுடன் கலந்து சாப்பிட வேண்டும்.

What do you think?

20 points
Upvote Downvote

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இதுதான் ஒரிஜினல் சுக்கு காபி

ஆசிபா கொலை குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது – விஜய் சேதுபதி