17 ஏப்., 2018

மசாலா வேர்க்கடலை பிரியாணி


தேவையானவை :
 • பாசுமதி அரிசி, மசாலா வேர்க்கடலை – தலா ஒரு கப்
 • வறுத்த வேர்க்கடலை, கொப்பரைத் துருவல் – தலா கால் கப்
 • காய்ந்த மிளகாய் – 6
 • தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
 • பட்டை – ஒரு அங்குலத்துண்டு
 • பிரியாணி இலை – 1
 • லவங்கம் – 2
 • கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன்
 • சோம்பு – அரை டிஸ்பூன்
 • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • உப்பு – தேவையான அளவு
செய்முறை :
வறுத்த வேர்க்கடலையை பொடித்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை உதிராக வேகவைத்து வடித்துக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், கொப்பரைத்துருவலை வறுத்து, ஆற வைத்து அரைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, சோம்பு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும். வறுத்து அரைத்த பொடியைச் சேர்த்து உப்பு போட்டு வதக்கி, மசாலா வேர்க்கடலையை சேர்த்து பிரட்டி இறக்கவும். இந்தக் கலவையை சேர்த்து கிளறவும். பின்னர் பொடித்த வேர்க்கடலையைத் தூவி பரிமாறவும்.