17 ஏப்., 2018

குறைந்த வாடகையில் இ- ரிக்ஷா - ஓலாவின் அடுத்த அதிரடிஓலா தனது கேப்ஸ் சேவையில் வரும் 12 மாதங்களுக்கும் 10,000 எலக்ட்ரிக் கார்களை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

எலெக்ட்ரிக் ஆட்டோக்கள், எலெக்ட்ரிக் பஸ்கள், எலெக்ட்ரிக் கார்கள், வாகனத்திற்கு மேல் சோலார் பேனல் அமைத்தல், சார்ஜ் ஸ்டேஷன்கள் அமைத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

வரும் 2021ம் ஆண்டிற்குள் சுமார் 10 லட்சம் எலக்ட்ரிக் கார்களை சேவையில் இறக்க ஓலா கேப்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

"சுமார் ஓராண்டிற்கு முன்பு எலக்ட்ரிக் கார் சேவையை ஓலாவில் அறிமுகம் செய்தோம். சுமார் 40 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்ததில் எலெக்ட்ரிக் கார் எங்களுக்கு நல்ல அனுபவத்தை தந்துள்ளது. தற்போது இந்த சேவையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளோம். என ஓலா நிறுவனத்தின் சி..., அகர்வால் கூறியுள்ளார்

இதன் மூலம் நாட்டில் எலெக்ட்ரிக் கார்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையங்களில் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.