ஊறுகாய் சாப்பிட்டால் பிரச்சனை வரும் – எச்சரிக்கை தகவல்

0
578
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவாக ஊறுகாய் மாறிவிட்டது. தினமும் ஊறுகாய் சாப்பிட்டால் உடல் நலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
ஊறுகாயில் உள்ள எண்ணெய் இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.
 
ஊறுகாயில் உப்பு, மசாலா பொருட்கள், எண்ணெய் சேர்த்து செய்வதால் இது உடல் நலத்திற்கு நல்லதல்ல.
ஊறுகாயை தொடர்ந்து சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இரத்த அழுத்தம் உள்ளவர்களும் நீரிழிவு நோய் இருப்பவர்களும், ஊறுகாயை தவிர்க்க வேண்டும்.
ஊறுகாய் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்படுவதால் உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்.  ஆகவே ஊறுகாய் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here