சுவஸ்திகாசனம் செய்முறையும் அதன் பலன்களும்

0
502
பங்கய மாதி பரந்த பல்ஆதனம்
அங்குள வாம்இரு காலும அவற்றனுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக் மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே.
– திருமந்திரம்
திருமூலர் திருமந்திரத்தில் மிகவும் சிறப்பித்துச் சொல்லப்படும் ஆசனம் சுவஸ்திகாசனம்.
சுவஸ்திகாசனம் செய்முறை

சமதரையில் அமர்ந்து வலதுகால் பாதத்தை உடலை நோக்கி இழுத்து வைத்துக் கொண்டு இடது பாதத்தை வலது கால் தொடை, முழங்கால் இடைச்சந்தில் உள்நுழைக்கவும்.

கால்விரல்கள் கீழாகவும் குதிங்கால் மேலாகவும் இருக்க வேண்டும். அதேபோல் இடது காலை இழுத்து வலது கால் உள்பக்கம் வைக்க வேண்டும்.

இரண்டு குதிங்கால்களும் இருபக்க அடித்தொடை அருகே இருக்க வேண்டும். கைகள் மூட்டுக்களின் அருகில் சின்முத்திரை நிலையில் வைக்க வேண்டும். முதுகினை நேராக வைத்து சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேவிட்டு சீராக்க வேண்டும்.
சுவஸ்திகாசனத்தின் பயன்கள்
  • இடுப்பை வலுப்படுத்தும்
  • நரம்பினை வலுப்படுத்தும்
  • முதுகு தண்டினை வலுப்படுத்தும்
  • முதுகு சதையினை வீரியப்படுத்தும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here