15 ஏப்., 2018

மாணவனின் தொண்டையை குத்திக்கிழித்த ஆசிரியர்!மஹாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ரோஹன் என்ற மாணவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்

கணித ஆசிரியர் அனைத்து மாணவர்களிடம் கணக்குகளுக்கான விடை கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மாணவன் ரோஹன் கணக்குகளை சரியாக செய்யாததால் ஆத்திரம் அடைந்த கணித ஆசிரியர் பிரம்பை எடுத்து, ரோஹனின் வாய்க்குள் திணித்துள்ளார். இதனால் ரோஹனின் உணவு மற்றும் காற்றுக்குழாய் பலத்த சேதமடைந்தது.

தொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால், ரத்தம் ஒழுகிய நிலையில் சிறுவன் மயங்கி கீழே விழுந்துவிட்டான். பிறகு ரோஹனை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்

இந்த கொடூர செயலை செய்த கணித ஆசிரியர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.