கோடை வெயிலை சமாளிக்க மிக எளிமையான டிப்ஸ்

0
514
கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. அதிலும் குறிப்பிட்ட பகுதிகளில் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரிக்கிறது. 
 
வெயில் காலத்தில் நமது உடலை பாதுகாக்க வேண்டியது அவசியம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவேண்டும். உடல் சூட்டை தணிக்க இளநீர், மோர் அடிக்கடி பருகலாம். கடைகளில் விற்கும் குளிர்பானங்களை தவிர்த்துவிடுங்கள். அதற்குப்பதிலாக வீட்டிலேயே ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.
 
கிரீன் டீயில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் கிரீன் டீ அருந்த வேண்டும்.
 
ரோஜா இதழ்களை இளநீர் விட்டு மையாக அரைத்து முகத்தில் தடவினால் வறண்டு போன உங்கள் சருமம் மென்மையாகும்.
 
கோடை காலங்களில் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது.
 
வெள்ளரிக்காயை அதிகம் சாப்பிடுங்கள். வெள்ளரிக்காயில் 93 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் உடலில் இருந்து வெளியேறும் நீர்சத்தை சரிசெய்யும்.
 
வாரம் ஒரு முறை என்னை தேய்த்து குளிக்க வேண்டும். இரவில் சிறிது வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here