வக்கராசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

0
547
இடுப்பு பகுதிக்கு வலிவும். வனப்பும் தரும் ஆசனம் வக்கராசனம். இந்த ஆசனத்தில் உடம்பு வளைந்து, நெளிந்து காணப்படுவதால் வக்கராசனம் என்ப பெயர் பெற்றது.
வக்கராசனம் செய்முறை
தரைவிரிப்பில் கால்களை நீட்டி உட்கார்ந்து, இடது காலுக்கு மேலாக வலது காலை மடக்கி இடது பக்கம் இடுப்பின் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். வலது முழங்கால் இடதுகை கக்கத்திற்குள் இருக்க வேண்டும்.
இடது கையால் இடதுகால் பெருவிரலைப் பிடித்துக் கொள்ள வேண்டும். வலது கையை முதுகுக்கு பின்புறமாய் வளைத்து இடது பக்க இடுப்பின் அருகில் உள்ள வலது காலைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையே வக்கராசனம் நிலை ஆகும்.
பின்பு இயல்பு நிலைக்குத் திரும்பவும். இம்மாதிரி இரண்டு மூன்றுமுறை செய்யலாம்.
வக்கராசனம் பலன்கள்
  • இடுப்புப் பகுதி வலுப்பெறும்
  • கால்கள் வலுப்பெறும்
  • இரத்த ஓட்டம் விருத்தியாகும்.
  • தேகம் பொழிவு பெறும்