அடுத்த முதல்வர் ரஜினிதான்! கமல் ஒன்னும் சாதிக்க முடியாது… ஆண்டவரின் அண்ணன் அட்ராசிட்டி

0
191
தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் அப்படி சொல்வதால் தன்னை முட்டாள் என்று கூறினால், கூறிக் கொள்ளட்டும். அவர்கள் என்னை அடுத்த வருடம் புரிந்து கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார் சாருஹாசன்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சாருஹாசன் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் குதித்துள்ளனர். 
இதில் கமல்ஹாசன் கட்சியை தொடங்கிவிட்டார். ஆனால் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி, கட்சி தொடங்குவது குறித்து தேதியை இன்னும் தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன், ஆன்மீக அரசியல் தொடங்கவிருக்கும் ரஜினிகாந்த்க்கு ஆதரவான கருத்தையே கூறி வருகின்றார். மேலும் கமல்ஹாசனால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது என்றும் கூறி வருகிறார்