ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது காலணியை வீசிய காவலர்

0
250
பெங்களூரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்துக் காவலர் ஒருவர் காலணியை கழற்றி வீசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிறது. பெங்களூரைச் சேர்ந்த ரிஷப் சாட்டர்ஜி என்பவர், பெங்களூர் சாலை தொடர்பான வீடியோ ஒன்றை காரில் இருந்தபடி, பதிவு செய்தார். 
பெல் ரோடு பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் 2 இளைஞர்கள் வருவதை தூரத்திலேயே பார்த்துவிட்ட போக்குவரத்துக் காவலர் ஒருவர், இருசக்கர வாகனத்தை நிறுத்த முயற்சிக்காமல், தனது காலணியை கழற்றி, இளைஞர்கள் மீது வீசினார்.
இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றது தவறு என்றாலும், போக்குவரத்துக் காவலர் செய்த செயலுக்கு சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, போக்குவரத்துக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.