வாழைப்பழத்தின் வகைகளும் அதன் பலன்களும்

0
568

பழங்களில் அதிக வகைகளை கொண்டது வாழைப்பழம் தான். அதில் ஒவ்வொரு வகை பழங்களும் நமக்கு மருத்துவ பலன்களை தருகிறது.

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

பழத்தின் வகைகளும் அதன் நன்மைகளையும்  இப்போது பாப்போம்

செவ்வாழை

இதில் வைட்டமின்-சி, பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்து.

மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.  மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவுக்குப் பின் 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.

கற்பூரவள்ளி

இந்த பழத்தில் செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் உள்ளது. இது உடல் சூட்டை தனித்து உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

ரஸ்தாளி

ரஸ்தாளி உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை சரியாகும்.மன அழுத்தமும் குறையும். உடல் சோர்வு நீங்கி உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
பொட்டாசியம், சோடியம், வைட்டமின் பி – 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது.

பூவன் பழம்

ஆர்த்ரைட்டிஸ் உள்ளவர்களுக்கு பலன் தரக்கூடியது. மூல நோய்களுக்கு உகந்தது. பித்தம் உள்ளவர்களும்  சாப்பிடலாம்.

பச்சை வாழைப்பழம் 

இதில் வைட்டமின், மினரல், நார்ச்சத்து உள்ளது. பச்சை வாழைப்பழம் இதயத்துக்கு வலு கூட்டுகிறது.பித்த நோய் குணமாகும். மேலும், உடல் எடையை குறைக்கச் செய்கிறது.

நேந்திர பழம்

இந்த பழத்தை தினமும் காலை உணவுக்கு பின் எடுத்துக் கொண்டால் இதயத்துக்கு நல்லது. இதயத் துடிப்புக்கும் நல்லது. நல்ல தூக்கத்தை கொடுக்கும் Prebiotics நிறைய உள்ளது.

ஏலக்கி

இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து. இது தசைக்கு நல்லது,

பேயன் பழம்

இதில் உள்ள Tryptophan என்னும் அமினோ அமிலம் மூளையில் உற்பத்தியாகும் செரோட்டினின் அளவை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தைப் போக்கும். புகைப்பிடிப்பதை நிறுத்த இது உதவியாக இருக்கிறது.

மொந்தன் பழம்

அல்சர் நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடலாம். மாதவிடாய்க்கு நல்லது.குடல் புண்களைக் கட்டுப்படுத்தும்

மட்டி பழம்

இதில் குறைந்த அளவு புரதம் மற்றும் உப்புச்சத்து இருப்பதால் சிறுநீரகப் பிரச்னைகளை சரி செய்யும்.இரைப்பை மற்றும் குடல் கோளாறு பிரச்னைகளை சரி செய்கிறது.

எச்சரிக்கை : சென்னை போன்ற பெருநகரங்களில் மோரீஸ் என்று சொல்லக்கூடிய வாழைப்பழம் விற்பனை செய்யப்படுகிறது. மரபணு மாற்றப்பட்ட இந்த வாழைப்பழங்களை சாப்பிட்டால்  ஒவ்வாமை, சைனஸ், ஆஸ்துமா போன்ற பல பிரச்னைகள் ஏற்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here