விரைவில் வருகிறது புதிய 100 ரூபாய் நோட்டுகள்

0
184

கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தியது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2000, 200, 50, 500 ரூபாய் புதிய நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

இந்நிலையில் லாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது.

இந்த புதிய 100 ரூபாய் நோட்டில் குஜராத் மாநிலத்தின் பாரம்பரியம் மிக்க மகாராணியின் படிக்கிணறு அச்சிடப்பட்டு உள்ளது.

இந்த ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் பழைய 100 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்கும் என ரிசர்வ் வங்கி
தெறிவித்துள்ளது.