உணவை வீணாக்கினால் அபராதம் – சவுதி அரசு அதிரடி

0
281சவுதி அரேபியாவில் தயார் செய்யப்படும் உணவுகளில் தினமும் 40% வீணாவதாக தகவல் வெளியானது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உணவு மற்றும் வேளான் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் அதிகமாக  உணவுகளை வீணாக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடம் பிடித்துள்ளதாக உணவு மற்றும் வேளான் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையடுத்து வீணடிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவிற்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டம், அனைத்து உணவகங்கள் மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்டவைகளுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை மீறினால் அதன் உரிமை ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here