கருணாநிதியின் உடல் நிலை மோசமானதை தொடர்ந்து கூடுதல் டாக்டர்கள் வரவழைப்பு

0
156

நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் நலிவு ஏற்பட்டதால் அவரது இல்லத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் விரைந்துள்ளனர்.

காவிரி மருத்துவமனையிலிருந்து கூடுதலாக 4 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க சென்றனர். சிகிச்சையளித்த பிறகு நோய் தொற்று ஒருவேளை குறையாவிட்டால், காவிரி மருத்துவமனைக்கு கருணாநிதியை அழைத்து செல்ல மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் கோபாலபுரம் வீட்டை சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொண்டர்களும் ஊடகவியலாளர்களும் கோபாலபுரம் இல்லத்தின் முன்பு குவிந்து இருப்பதால் கோபாலபுரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.