மாங்காய் இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி?தேவையான பொருட்கள் மாங்காய் இஞ்சி - 200 கிராம் பச்சை மிளகாய் - 4 எலுமிச்சைப்பழம் - 2 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை:

மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அதில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து இறக்கி விடவும்.
நீர் வெதுவெதுப்பாக இருக்கும்போது மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு கலந்து ஊறவிடவும். நன்றாக ஊறிய பிறகு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.
Blogger இயக்குவது.