19 ஜூலை, 2018

மரச்செக்கு சமையல் எண்ணெய்க்கு அதிகரிக்கும் வரவேற்பு


பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் மரச்செக்கு சமையல் எண்ணெய்க்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கரூர் மாவட்டம் ஆத்தூர் பிரிவில் செழியன் என்ற விவசாயி, பெரிய கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட  உரலில், வாகை மரத்தினால் ஆன செக்கில், மாடுகளை பூட்டி, எண்ணெய் பிழிந்தெடுக்கிறார்.

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் மரச்செக்கு எண்ணெய்யில்  உயிர்சத்துக்கள் குறையாமல் இருக்கும். எண்ணெயையும், மரச்செக்கில் கிடைக்கும் புண்ணாக்கையும் மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாக அவர் கூறினார்.