வாழ வைக்கும் வாழைப் பூ

0
277

வாழைப்பூவில் உள்ள துவரப்பில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகள் வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று இன்சுலினை சுரக்கச் செய்யும். சர்க்கரை அளவும் கட்டுப்படும்.

ரத்தமூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அடிக்கடி வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.

உடல் சூடு உள்ளவர்கள், வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி அடையும்.

வாழை பூவை கொதிக்க வைத்து அத்துடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை அருந்தி வந்தால், வயிற்று கடுப்பு நீங்கும்.

மாதவிலக்கு காலத்தில் வாழைப்பூச் சாற்றில், சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், உதிரப்போக்கு கட்டுப்படும்.உடல் அசதி, வயிற்று வலி குறையும்.

வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

இப்படி பல நன்மைகள் உள்ள வாழைப்பூவை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.