நண்பர்கள் தினம் எப்படி உருவானது தெரியுமா?

0
625

நண்பர்கள் தினம் பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளில் கடைபிடிக்கப்படுகிறது. 1919ல் இருந்தே தென் அமெரிக்க நாடுகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது. 1935ல் அமெரிக்காவில் கடைபிடிக்கப்பட்டது. 1958ல் பராகுவே சார்பாக முதன்முறையாக உலக நண்பர்கள் தினம் உருவாக்கப்பட்டது.

நட்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐ.நா., 2011 ஏப்., 27ம் தேதி ஆண்டுதோறும் ஜூலை 30, உலக நண்பர்கள் தினம் என அறிவித்தது. இருப்பினும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு (ஆக., 5) நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்றைய வேகமான உலகில் குடும்பத்துக்குள் பகிர்ந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நண்பர்களுக்குள் தான் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மனதின் துன்பத்துக்கு மருந்தாக நண்பர்கள் விளங்குகின்றனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும், புதிய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும். இப்படிப்பட்ட நண்பர்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் அலைபேசி, சமூக வலைதளம், ஆகியவற்றின் மூலம், அவர்களுடன் அந்த நாள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

புதிய நண்பர்களை ஏற்கும் நேரத்தில், பழைய நண்பர்களை மறந்துவிடக்கூடாது. பிரிந்த நட்பை உயிர்ப்பிக்கும் நாளாகவும் இந்நாள் அமைகிறது.

கருத்து வேற்றுமையினால் நண்பர்களுக்கு பிரிவு வருவது இயற்கைதான், ஆனால் அதை அடுத்த சில மணி நேரங்களில் உணர்ந்து தாமாக பேச முன்வர வேண்டும். நட்பு எந்த ஒரு மனிதனும் தனி தீவாக ஒதுங்கிவிடாமல் காப்பாற்றுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here