அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்

0
332

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கருணாநிதியின் உடல் நேற்று நள்ளிரவு கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு சிஐடி காலனி வீட்டிற்கும் கொண்டு செல்லப்பட்டது. குடும்பத்தினர் உறவினர் மற்றும் நண்பர்கள் அஞ்சலி செலுத்திய பிறகு அவரது உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கருணாநிதியின் குடும்பத்தினர், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அமைச்சர் ஜெயக்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திமுக பொதுச்செயலர் அன்பழகன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.
இறுதியில் சந்தனபேழையில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here