6 ஆக., 2018

கருணாநிதி கவலைக்கிடம் - காவேரி மருத்துவமனை அறிக்கை


திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கருணாநிதியின் முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகே கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரிவிக்க இயலும் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.