தேநீரைப் பற்றி சில உண்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்

0
286

தேநீர் என்று அழைக்கப்படும் டீ அருந்தும் பழக்கம், முதன் முதலில் சீனாவில் தான் ஆரம்பிக்கப்பட்டது.

ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பழக்கம் தோன்றியது. சீனாவில் பிளாக் டீ சர்க்கரை இல்லாமல் தேநீர் அருந்துவார்கள். பால் சர்க்கரை சேர்த்து அருந்தும் பழக்கம் இந்தியாவில் அறிமுகம் ஆனது.

கிமு 2,337 சீனாவில் தேநீர் அறிமுகம் ஆனது. 1644 இங்கிலாந்தில் அறிமுகமானது. அதன்பிறகு 1800ம் ஆண்டில் உலகம் முழுவதும் பிரபலமானது.

கொதிக்கும் நீரில் எதிர்பாராதவிதமாக விழுந்த தேயிலை மூலம் உருவானதுதான் இந்த டீ அருந்தும் பழக்கம். இன்று உலகம் முழுவதும் மாபெரும் பானமாக வளர்ந்திருக்கிறது.

இந்தியாவும் இலங்கையும் தேயிலை உற்பத்தியில் சிறந்த இடம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here