#MeToo என்ற ஹேஷ்டேக்கின் வரலாறு தெரியுமா?

0
23

தற்போது, சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக #MeToo என்ற ஹேஷ்டேக் வலம் வருகிறது. இந்த MeToo என்ற ஹேஷ்டேக் எப்போது, எங்கு  உருவானது என்று தெரியுமா?

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் காலங்காலமாக உலகமெங்கும் ஏதோ ஒரு மூலையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு சிலர், பயத்தின் காரணமாக வெளிக்கொண்டு வருவதில்லை. ஆனால், சிலர் தைரியமாக வெளிக்கொண்டு வந்து நியாத்திற்க்காக போராடுகிறார்கள்.

Me Too என்ற ஹேஷ்டேக்கின் ஆரம்பம், 2005 முதல் 2009 வரை மிகவும் பிரபலமாக இருந்த Myspace எனும் சமூக வலைத்தளத்தில், முதன் முதலாக Me Too என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி Tarana Bureke என்ற சமூக ஆர்வலர் முதல் பதிவினை வெளியிட்டார். மேலும் Me Too என்ற தலைப்பில் ஆவணப்படமும் வெளியிட்டார்.

இதற்கு Tarana Bureke கொடுத்த விளக்கம் என்னவென்றால் “13 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதால், அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் நானும் இதேபோல் பாதிக்கப்பட்டேன், அதாவது Me Too என்ற ஹேஷ்டேக்கினை பயன்படுத்தினேன்” என்று அவர் கூறினார்.

15, அக்டேபா் – 2017-ல்  ஹாலிவுட் நடிகை Alyssa Milano, Me Too என்ற ஹேஷ்டேக்கிற்கு ஆதரவு தொிவித்து தனது Twitter பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார், அதில் பெண்கள் தனக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகளை வெளிக்கொண்டு வாருங்கள் என தொிவித்தார்.

இதனை அவர் நண்பகல் 12 மணிக்கு தொிவித்தார், அந்த நாள் முடிவதற்க்குள் 2 லட்சம் நபர்கள் Me Too வை பயன்படுத்தி இருந்தனர். மேலும், அடுத்த நாளில் 5 லட்சம் நபர்கள் வரை பயன்படுத்தி Me Too வை பிரபலபடுத்தினர்.

இதன் பிறகு சில நாட்களில், Me Too வை பயன்படுத்தி சுமார் 85 நாடுகளிலிருந்து 17 லட்சம் நபர்கள் சமூக வலைதளங்களில் பதிவுயிட்டுள்ளதாக நடிகை Alyssa Milano டுவிட் செய்தார்.

இதேபோல், Me Too, Facebook – லும் பிரபலமானது, 47 லட்சம் நபர்கள் Me Too வில் பதிவிட்டுருந்தனர்.

2018ல் ஜனவரி மாத தொடக்கத்தில் #timesup என்ற ஹேஷ்டேக்கும் பிரபலமானது. ஆதாவது, பொருத்தது போதும் பொங்கி எழு மனோகர என்பது போல் பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஹாலிவுட் நடிகைகள் மத்தியில் இது மிகவும் பிரபலமாக இருந்தது.

#MeToo #Timesup என்ன ஹேஷ்டேக்கிற்கு twitter நிறுவனம் சிறப்பு எமேஜிகளை அறிமுகப்படுத்தியது.

மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆண்களுக்கும் மற்றும் பொய் பாலியல்  குற்றங்களுக்கு ஆளான ஆண்களுக்கு ஆதரவாக #HimToo என்ற ஹேஷ்டேக்கையும் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

தவறு இழைத்தவருக்கு தண்டனை அவசியம், ஆனால் ஒரு சிலர் இந்த ஹேஷ்டேக்கினை தவறாக பயன்படுத்த மிக அதிகமான வாய்ப்புள்ளது. மேலும், இதன் மூலம் அப்பாவிகள் யாரும் பாதிக்கக்கூடாது என்பது பொதுவான கருத்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here