கார்போகரிசி மூலிகையின் வியக்கவைக்கும் பலன்கள் தெரியுமா?

0
531

ஆதிகாலத்தில் சைனாவிலும், இந்தியாவிலும் இதன் எண்ணெயை உடல் வெளி பாகத்தில் தேய்த்து தோல் வியாதிகளைப் போக்கினர் மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியூட்ட இதை உபயோகித்தார்கள்.

இதன் வேர் பல் வியாதிகளுக்குப் பயன்படும். இலை அமீபாவால் வரும் வயிற்றுப் போக்கிற்கும், புண்களை ஆற்றவும் வல்லது. இதன் பழம் வாந்தி, மூலம், இரத்த சோகை, சுவாச சம்பந்தமான நோய்கள் குணப்படுத்தும். முடிவளரவும் பயன் படுத்தப்பட்டது.

வயிற்று வலி, முதுகு வலி, கிட்னிகள் சம்பந்தப் பட்ட நோய்களையும் குணப்படுத்தும். இது தாது விருத்தியுண்டாக்கி உடல் வன்மை பெறப் பயன்படும்.

இதன் விதையிலிருந்து எண்ணெய் எடுத்து அதை இருதய சம்பந்தமான நோய்களுக்கும், யானைக்கால் வியாதியைக் குணப்படுத்தவும், இரத்த ஓட்ட சம்பந்தமான வியாதியை சீர் செய்யவும், தோல் வியாதிகளைக் குணப்படுத்தவும், மற்றும் வெண்குஷ்டம்,  குஷ்டம், “AIDS” க்கும் நல்ல மருந்தாகப்பயன்படுகிறது.

கார்போகரிசியால் கடுவன், விரணம், பயங்கரமான சர்ப்பகீட தாவர விஷங்கள், வாதசிலேத்தும தொந்தம், தினவு, யானைச் சொறி, கிரந்தி ஆகிய இவைகள் நீங்கும். பித்தம் அதிகரிக்கும் என்பர்.

இதன் சூரணத்தை 5 – 10 குன்று எடை சர்க்கரையுடன் கூட்டிக் கொடுக்கலாம். இது தீபத்தை உண்டாக்கும். மலத்தைப் போக்கும். தோல் சம்பந்தமான பல வியாதிகளைக் குணப் படுத்தும். விஷேசமாக இந்த சரக்கை வாசனைத் திரவியங்களிலும் உபயோகப் படுத்துவதுண்டு.

சந்தனாதிச் சூரணம்- கார்போக அரிசி, நீரடிமுத்து, கஸ்தூரி மஞ்சள், கோரைக் கிழங்கு, சந்தனத்தூள், அகில் கட்டை, தேவதாரு, கற்பாசி, வெட்டிவேர், குருவி வேர், ஆக பத்து சரக்குகளையும் வகைக்குப் பலம் ஒன்றாக இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்யும் போது இச்சூரணத்தை நீர் விட்டுக் குழைத்துத் தேகமெங்கும் பூசித் தேய்த்து 5 – 10 நிமிடம் வரை ஊற விட்டுப் பின் நன்றாய்த் தேய்த்துக் குளிக்கவும்.

இப்படி ஒரு மாதம் செய்ய சொறி, சிரங்கு, நமைச்சல், படை, தவளைச் சொறி, கருமேகம், இரத்தக் கொதிப்பனாலுண்டாகும் பல நிற வடுக்கள் யாவும் தீரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here