கேன்சரை உண்டாக்கும் பிரபல டூத் பேஸ்ட்?

0
298

புதுடெல்லி, நவ.13 கோல்கேட் பற்பசையில் புற்று நோயை உருவாக்கும் நச்சு ரசாயனப் பொருள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோல்கேட் பற்பசைப் பயன்படுத்தாத வீடுகளே குறைவு. உலகமெங்கும் பயன்படுத்தப்படும் கோல்கேட்டில் ட்ரீகுளோசா என்ற நச்சு ரசாயனப் பொருள் இருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நச்சுயியல் ஆய்வு இதழ் (Chemical Research in Toxicology) தெரிவித்துள்ளது.

இவ்விதழில் வெளியிட்டுள்ள ஆய்வானது வேர்ல்டு ஹெல்த் கேர் என்ற இணைய இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இணைய இதழில் கூறியுள்ளதாவது: கோல்கேட் பற்பசையில் ட்ரீகுளோசா என்ற நச்சு ரசாயனப் பொருள் உள்ளது. இந்த ரசாயனப் பொருள் புற்றுநோய்க்கான செல்களை மிக அதிகமான அளவில் உற்பத்தி செய்யும்.

உடல் நலத்துக்கு ட்ரீகுளோசா கடுமையான தீங்கு விளைவிக்கும். இந்த ஆய்வு மட்டுமல்ல; ஏற்கெனவே இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளும் இதே முடிவுகளுக்கே வந்துள்ளன.

ட்ரீகுளோசா என்ற ரசாயனப் பொருள் தோலை ஊடுருவிச் சென்று நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்பாடுகளைப் பாதிக்கும். 2008இல் மேற்கொள்ளப்ட்ட ஆய்வின்படி, சோதனை செய்யப்பட்ட 2517 பேரில் 75 விழுக்காட்டினரின் சிறுநீரில் ட்ரீகுளோசா ரசாயனப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ட்ரீகுளோசா ரசாயனமானது சலவையகங்களில் டிடர்ஜெண்டாகவும், கைகளைக் கழுவும் போது பயன்படுத்தப்படும் ரசாயனமாகவும், பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் அபாயகரமானது.

நேரடியாக இரத்தில் ஊடுருவிச்சென் று நாளமில்லாச் சுரப்பில் தலையிட்டு உடலின் சம நிலையைச் சீர்குலைத்து விடும். இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் கோல்கேட் நிறுவனம் இதை மறுத்துள்ளது. கோல்கேட் பற்பசையினால் எந்தப் பாதிப்பும் நேராது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இப்படி  கெமிக்கலை நம்பி நமது உடலை நாமே கெடுத்துக்கொள்வத்ற்கு பதிலாக தினமும் இயற்கையாக இலவசமாக கிடைக்கும் ஆலும், வேலுமையே பயன்படுத்தி நம்மை தற்காத்துக்கொள்ளலாம் என்று சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்