கருங்காலி மரத்தின் மருத்துவ குணங்கள் தெரியுமா?

0
1681

கோடாரி போன்ற மரம் வெட்டுகிற ஆயுதங்களுக்கு எல்லாம் மிக சிறந்த முறையில் கைப்பிடி செய்ய உகந்த மரம் தான் கருங்காலி மரம் பயன்கள். மரத்தின் வகையே மொத்த மரங்களை வீழ்த்துவதற்கு துணை புரிவதால் இந்த அவப்பெயர் கருங்காலியை பற்றிக்கொண்டது. கூடவே இருந்து துரோகம் செய்த மனிதர்களையும் கருங்காலி என அழைக்கும் பழக்கம் உள்ளது.

கருங்காலி வேரை எடுத்து சுத்தப்படுத்தி நீரில் ஊறவைக்க வேண்டும். பின்பு அந்த நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். பித்தத்தைக் குறைக்கும். நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இருவேளை இதைக் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

கருங்காலி மரத்தின் பிசினை எடுத்து காயவைத்து பொடிசெய்து அதை பாலுடன் கலந்து அருந்தி வந்தால் உடல் பலமடையும். கரப்பான் நோயினை போக்கவல்லது. பால்வினை நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.

அதிக இரத்தப்போக்குள்ள பெண்களுக்கு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கி புத்துணர்வு கொடுக்கும். பெண்களுக்கு கருப்பையை வலுப்படுத்தும். மலட்டுத் தன்மையைப் போக்கும்.  பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலைக் குறைக்கும்.

கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும்.

கருங்காலி மரப்பட்டை அல்லது மரக்கட்டை 1 பங்கு எடுத்து 8 பங்கு நீர் சேர்த்து நன்றாகக் காய்ச்சி அதனுடன் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்த்து மீண்டும் காய்ச்சி வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால், ஈளை, இருமல் நீங்கும். சுவாச காச நோய்கள் அகலும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும். உடலில் உள்ள தேவையற்ற விஷ நீரை வெளியேற்றும். வாய்ப்புண்ணை அகற்றி வாய் நாற்றத்தைப் போக்கும். நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோயாளிகள் இதை அருந்துவது நல்லது.

மரப்பட்டையை மன நோய், கண் நோய், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருந்தாகத் தருவார்கள். மரத்தூள் ஜூரம், பேதி, வயிற்று நாக்குப்பூச்சி, வலி, வீக்கம், வெண்குஷ்டம், குஷ்டம், நோய் அரிப்பு, அழுகிய புண், சர்க்கரை நோய் ஆகியவற்றை குணமாக்குகின்றது.

சீமைக் காசிக்கட்டி எனும் இதன் பிசினை வெற்றிலை பாக்கில் வைத்து சிலர் சாப்பிடுவார்கள். இதனால் பற்களில் இரத்தக் கசிவு மற்றும் ஈறுகளில் உணர்வற்ற நிலையைப் போக்குகிறது. வாய்ப்புண்ணைக் குணமாக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here