நுணா மூலிகையின் மகிமை என்ன?


எல்லா வித நிலங்களிலும் வளர்க்கூடிய சிறுமரம். தமிழகமெங்கும் வளர்கிறது. மா இலை போன்றும், இதிரடுக்கில் அமைந்த இலைகளையும், நாற்கோண சிறு கிளைகளையும் சிறிய வெண்னிற மலர்களையும் முடிச்சு முடிச்சாக்காய்களையும் கருப்பு நிறப் பழங்களையும்உடைய மரம்.

வெப்பம் தணிக்கும். வீக்கம் கரைக்கும், மாந்தம், கல்லீரல், மண்ணீரல் கோளாறுகளைத் தீர்க்கும். பசியைத் தூண்டும். தோல் நோயகளைக் குணமாக்கும். துணிகளுக்கு நிறமூட்டும். நுணா இலைச்சாறு ஒரு பங்கும், உந்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகிய மூன்றின் சாறும் ஒருபங்கு கலந்து 3,4 வேளை கொடுத்து வரச் சகல மாந்தமும் தீரும்.

நுணாக்காயையும், உப்பையும் சமன் அரைத்து அடை தட்டி உலர வைத்துப் புடமிட்டு அரைத்துப் பற்பொடியாக நாளும் பல் துலக்கி வந்தால் பற்கள் தூய்மையாகும், பல் வலி, பல்லரணை, வீக்கம், குரிதிக் கசிவு ஆகிய நோய்கள் தீரும்.

நுணா வேரையையும், காஷாயமிட்டுக் குடிக்கச் சுகப்பேதியாகும். கெடுதலில்லாமல் மலர்ச்சிக்கல் தீரும். ஒரு கிலோ நுணாப் பட்டையை இடித்து நான்கு படி நீரில் போட்டு அரைப்படியாகச் சுண்டக் காய்ச்சவும்.

இத்துடன் அரைப்படி எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். இந்தக் கலவையில் ஒரு லிட்டர் எள் நெய் சேர்த்துச் சுண்டக் காயச்சி வடித்து வைக்கவும். இந்தத் தைலத்தை வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசி, தலைக்கும் தேய்த்து அரைமணி நேரம் சென்று குளித்து வரவும். உடலில் தோன்றும் கழலைக் கட்டிகள், அரையாப்பு கட்டிகள் மேகப்புண் ஆகியன குணமாகும்.

முறைசுரம், பித்தகுன்மம், படை நோய்களும் குணமாகும். நுணாப் பட்டையக் கொதி நீரில் போட்டு ஊறவைத்தால் சாயம் இறங்கிவிடும்.

வெண்மையான துணிகளுக்குக்கு காவி நிறம் ஊட்டலாம். இந்த காவி ஆடை உள் நோயைத் தீர்க்கும். வெண்நுணாவிலிருந்து குளிர் பானம் தயார்

செய்து வெளிநாட்டிற்கு அனுப்புகிறார்கள். இதை சென்னையில் ஒரு நிறுவனம் செய்து வருகிறது. இந்தப்பானம் (நோனி) மருத்துவ குணம் வாய்ந்தது.
Blogger இயக்குவது.