இயற்கை எழில்சூழ்ந்த திருத்தலம் ஸ்ரீசைலம்

0
22

ஆந்திரப்பிரதேசம் கர்நூல் மாவட்டத்தில் நல்லமல்லா மலைப் பிரதேசத்தில் இருக்கும் ஸ்ரீசைலம், புகழ்பெற்ற சிவதலம். ஆந்திராவில் தேவாரப் பாடல் பெற்ற சிவதலம் இது ஒன்றுதான். சிவனின் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

மலை உச்சியில் கோயில், கீழே கிருஷ்ணா நதி. அபாரமான அழகுடன் இருக்கிறது ஸ்ரீசைலம். திருப்பதியைப் போல நீண்ட மலைப் பயணம் மேற்கொண்டுதான் இந்த இடத்தை அடைய வேண்டும்.

தேசிய வன விலங்குகள் சரணாலயத்துக்குள் நுழைந்துதான் ஸ்ரீசைலம் செல்ல வேண்டும். இந்த ஊர், வரலாற்றுச் சிறப்புமிக்கது. சுமார் 1,000 ஆண்டுகள் பழைமையான கோயில் என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கோயிலில் மல்லிகார்ஜூனர், ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபர்பதநாதர் என்று அழைக்கப்படும் சிவன் சுயம்பு மூத்தியாகக் காட்சியளிக்கிறார்.

நந்திதேவர் அவதரித்த ஸ்தலம் என்ற பெருமையும் கொண்டது ஸ்ரீசைலம். மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சியில் இருக்கும் ஸ்ரீசைலம் கோயில் 50 கி.மீ தூரம்தான் என்றாலும் மலைப்பாதையில் வளைந்து நெளிந்து ஏறிச் செல்ல, சுமார் மூன்று மணி நேரம் ஆகும். அடர்ந்த வனப் பகுதி என்பதால், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தனியார் வாகனங்கள் அனுமதி இல்லை.

ஆந்திராவின் பெரிய அணைகளில் ஒன்று ஸ்ரீசைலம் அணை . கிருஷ்ணா நதியின் குறுக்கே, உயரமான மலைகளுக்கு நடுவே கட்டப்பட்டிருக்கும் இந்த அணையில் இருந்துதான் கண்டலேறு அணைக்குத் தண்ணீர் திருப்பப்பட்டு, அங்கிருந்து கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னக்கு நீர் வருகிறது.

மலை மீதிருந்து பார்த்தால், அணையின் பிரம்மாண்டம் நம்மை வியக்கவைக்கும். கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப் பாதையில் இறங்க இறங்க… ஆற்றின் ஆழம் மேலும் ஆச்சரியப்படுகிறது.

இந்த அணையில் நீர் மின் நிலையங்களும் அமைந்திருப்பதால், மின்சாரக் கோபுரங்கள் நாம் இதுவரை பார்த்திராத வடிவத்தில் எல்லாம் இருக்கின்றன.

சென்னை 480 கி.மீ திருப்பதி 370 கி.மீ ஓங்கோல் 175 கி.மீ ஸ்ரீசைலத்தில் கோயிலுக்குச் சொந்தமான விடுதிகள் உள்ளன. தனியார் விடுதிகள் குறைவே! எனவே, முன்பதிவு செய்துகொண்டு செல்வது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here