வாட்ஸ்-அப் குரூப்பிலும் வந்த மறைமுகமான வசதி

0
411

சமூக வலைத்தளங்களில் மிக முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக கருதப்படுவையான வாட்ஸ் அப், பேஸ்புக் இல்லாமல் இன்றைய வாழ்க்கை யாருக்கும் நகராது என்பது அனைவரும் அறிந்ததே.

வாட்ஸ் அப்பும், பேஸ்புக்கும் ஒரே நிறுவனமாக இருந்தாலும், அதனிடையே ஒரு போட்டியை ஏற்படுத்தும் நிலையை பயனாளர்கள் உருவாக்கிவிட்டார்கள் என்றே கூறலாம்.

இதற்கிடையில் பேஸ்புக்கில் இருக்கும் வசதிகள் வாட்ஸ்அப்பில் இல்லை என்று பயனாளர்கள் தெரிவித்ததையடுத்து குரூப் வீடியோ காலிங், ஒருமுறை அனுப்பிய மெசேஜை டெலிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வாட்ஸ் அப்பில் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் தற்போது, வாட்ஸ்அப் குரூப்பிலும், ஒருவர் மற்றொருவருடன் மறைமுகமாக பேசும் வசதியை கொண்டுவர வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய வாட்ஸ்அப் செயலி 2.18.335 வெர்ஷனில் கொண்டு வந்துள்ளது.

இதனை ஐஓஎஸ் பயனாளர்களுக்கும், ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த புதிய செயலியியை வாட்ஸ்அப் பயனாளர்கள் இரவில் பயன்படுத்தும்போது, டார்க்மோட் (Dark Mode) என்ற வசதியை கொண்டு கண் கூசாமல் பயன்படுத்தலாம்.

இந்நிலையில் இதில் ஸ்டிக்கர்கள், கூடுதல் எமோஜி, வாட்ஸ்அப்பை ஓபன் செய்யாமலே ரிப்ளே செய்யும் வசதி போன்றவைகளை விரைவில் கொண்டுவர வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here